April

புதிதாக்கப்பட்ட சரீரம்

April 13

This Body Fashioned Anew

Who shall change our vile body, that it may be fashioned like unto his glorious body. (Philippians 3:21)

Often when we are racked with pain and unable to think or worship, we feel that this indeed is “the body of our humiliation,” and when we are tempted by the passions which rise from the flesh we do not think the word vile at all too vigorous a translation. Our bodies humble us; and that is about the best thing they do for us. Oh, that we were duly lowly, because our bodies ally us with animals and even link us with the dust!

But our Savior, the Lord Jesus, shall change all this. We shall be fashioned like His own body of glory. This will take place in all who believe in Jesus. By faith their souls have been transformed, and their bodies will undergo such a renewal as shall fit them for their regenerated spirits. How soon this grand transformation will happen we cannot tell; but the thought of it should help us to bear the trials of today and all the woes of the flesh. In a little while we shall be as Jesus now is. No more aching brows, no more swollen limbs, no more dim eyes, no more fainting hearts. The old man shall be no more a bundle of infirmities, nor the sick man a mass of agony. “Like unto his glorious body.” What an expression! Even our flesh shall rest in hope of such a resurrection!

ஏப்ரல் 13

புதிதாக்கப்பட்ட சரீரம்

நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் (பிலி.3:2).

பல சமயங்களில் நாம் நோயினால் அவதிப்பட்டு யோசிக்கவும் கடவுளை ஆராதிக்கவுங்கூட இயலாத நிலையில் இருக்கும்போது மெய்யாகவே இந்தச் சரீரம் அற்பமானது என்று உணர்கிறோம். மாம்சத்துக்கேதுவான வெறியினால் சோதனைகள் ஏற்படும்போது நம் சரீரத்தை அற்பமானது என்று குறிப்பிட்டதில் தவறில்லை என்று அறிகிறோம். நம் சரீரங்கள் நம்மைத் தாழ்வுபடுத்துகின்றன. அவை செய்யும் சிறப்பான காரியம் அதுதான். நம் சரீரங்கள் நம்மை மிருகங்களோடு ஒன்று சேர்ப்பதினாலும் நம்மைத் தூசியோடு இணைப்பதினாலும் நாம் உண்மையாகவே தாழ்மை உள்ளவர்களாயிருப்பது அவசியமாகும்.

ஆனால் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இதையெல்லாம் மாற்றிவிடுவார். நம் சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பானதாக்குவார். இயேசுவை நம்புகிறவர்கள் ஒவ்வொருவரிலும் இந்த மாறுதல் ஏற்படும். விசுவாசத்தினாலே அவர்கள் ஆன்மாக்கள் புதிதாக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக்கப்பட்ட அவர்கள் ஆவிக்கு எற்றதாக அவர்கள் சரீரங்களும் புதிதாக்கப்படும். இந்த மாற்றம் எவ்வளவு சீக்கிரம் ஏற்படும் என்று நாம் சொல்லமுடியாது. ஆனால் அதைக் குறித்த நிச்சயம் இக்காலச் சோதனைகளையும் மாம்சத்தைச் சார்ந்த துன்பங்களையும் சகிக்க உதவமுடியும். இன்னும் சிறிது காலத்தில் இயேசு இப்போது இருப்பதைப்போல நாமும் இருப்போம். அதற்குப் பின் நெற்றி வலியினாலோ, வீங்கின கைகால்களினாலோ, மங்கிவரும் கண்களினாலோ, திடனற்ற மனதினாலோ அவதியுற வேண்டியதில்லை. வயது முதிர்ந்தவர் பலனற்றவராயும் நோயுற்றவர் நோவு மிகுந்தவராயும் இருக்கவேண்டியதில்லை. இந்தச் சரீரம் அவர் மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்தப்படும். இது எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள். அவ்விதமான உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கும் நம்பிக்கையோடு நம் சரீரமும் அமர்ந்திருக்கமுடியும்.

13. April

„Welcher unsren niedrigen Leib verklären wird, dass er ähnlich wird seinem verklärten Leibe.“ Phil. 3, 21.

Oftmals, wenn wir von Schmerz gefoltert und unfähig zum Denken oder Anbeten sind, fühlen wir, dass dies in der Tat „der Leib unserer Demütigung“ ist; und wenn wir von den Leidenschaften, die aus dem Fleisch entspringen, versucht werden, so halten wir das Wort „niedrig „durchaus nicht für eine zu starke Übersetzung. Unser Leib demütigt uns; und dies ist ungefähr das beste, was er für uns tut. O, dass wir recht demütig wären, denn unser Leib zeigt unsere Verbindung mit den Tieren und verkettet uns sogar mit dem Staube!

Aber unser Heiland, der Herr Jesus, wird all dies wandeln. Wir sollen seinem eigenen verklärten Leibe ähnlich werden. Dies wird bei allen stattfi nden, die an Jesus glauben. Durch den Glauben sind ihre Seelen verwandelt worden, und mit ihren Leibern wird eine Erneuerung vorgehen, um dieselben für ihre wiedergeborenen Geister geeignet zu machen. Wie bald diese große Verwandlung geschehen wird, können wir nicht sagen; aber der Gedanke daran sollte uns helfen, die heutigen Prüfungen und alle Leiden des Fleisches zu ertragen. Über ein kleines sollen wir sein, wie Jesus jetzt ist. Keine schmerzenden Stirnen mehr, keine geschwollenen Glieder mehr, keine trüben Augen mehr, keine ermattenden Herzen mehr. Der Greis soll nicht mehr ein Bündel von Gebrechen sein, und der Kranke nicht mehr eine Masse von Qual. „Ähnlich seinem verklärten Leibe.“ Was für ein Ausdruck! Sogar unser Fleisch soll ruhen in der Hoffnung solcher Auferstehung!