April

கடவுளின் குளவிகள்

April 4

God’s Hornets

And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee. (Exodus 23:28)

What the hornets were we need not consider. They were God’s own army which He sent before His people to sting their enemies and render Israel’s conquest easy. Our God by His own chosen means will fight for His people and gall their foes before they come into the actual battle. Often He confounds the adversaries of truth by methods in which reformers themselves have no hand. The air is full of mysterious influences which harass Israel’s foes. We read in the Apocalypse that “the earth helped the woman.”

Let us never fear. The stars in their courses fight against the enemies of our souls. Oftentimes when we march to the conflict we find no host to contend with. “The Lord shall fight for you, and ye shall hold your peace.” God’s hornets can do more than our weapons. We could never dream of the victory being won by such means as Jehovah will use. We must obey our marching orders and go forth to the conquest of the nations for Jesus, and we shall find that the Lord has gone before us and prepared the way; so that in the end we will joyfully confess, “His own right hand and his holy arm, have gotten him the victory.”

ஏப்ரல் 04

கடவுளின் குளவிகள்

உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன் (யாத்.23:28).

அந்தக் குளவிகள் என்னவென்று நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அவைகள் கடவுளின் சொந்த சேனை. இஸ்ரவேலர் எளிதில் வெற்றியடைவதற்காக அவை அவர்களுக்கு முன்னே போய் எதிரிகளைக் கொட்டி வருத்த அனுப்பப்பட்டிருந்தன. தம் மக்கள் போரில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே நம் கடவுள் தாம் தெரிந்துகொண்டுள்ள விதத்தில் தம் மக்களுக்காகப் போர் செய்து எதிரிகளை அவமானப்படுத்திவிடுவார். பல சமயங்களில் சீர்திருத்தவாதிகள்கூட ஈடுபடாதவிதத்தில் சிறந்த முறைகளைப் பயன்படுத்தி, பகைவர் உண்மையைக் குறித்துக் குழப்பமடையச் செய்வார். இஸ்ரவேலரின் எதிரிகளை அலைக்கழிக்கும் பலமாகிய சக்திகள் நிலவுகின்றன. யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் பூமியானது ஸ்திரீக்கு உதவியாக, விழுங்கினது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நாம் ஒன்றிற்காகவும் ஒருபோதும் பயப்படவேண்டியதில்லை. நம் ஆத்துமாவின் பகைவருக்கு எதிராக தங்கள் வழியிலே செல்லும் நட்சத்திரங்கள் போர் செய்யும். பல தடவைகள் நாம் போருக்காகச் செல்லும்போது நம் எதிரிகளை அங்கு காண்பதில்லை. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் அங்கு சும்மாயிருப்பீர்கள். நம் ஆயுதங்களைவிட கடவுளின் குளவிகள் வலிமை வாய்ந்தவை. யேகோவா என்னென்ன முறைகளைப் பயன்படுத்தி, வெற்றிகிடைக்கச் செய்வார் என்பதை நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. நாம் போருக்குப் பறப்படுவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நாடுகளை இயேசுவுக்கென்று வெல்வதற்காக முன்னேறிச்செல்லவேண்டும். இறுதியில் அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும் இரட்சிப்பை உண்டாக்கினது என்று நாம் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ளத்தக்கதாக அவர் நமக்கு முன்னே சென்று வழியை ஆயத்தம்பண்ணி வைத்துள்ளார் என்று காண்போம்.

4. April

„Ich will Hornissen vor dir her senden, die vor dir ausjagen die Heviter, Kanaaniter und Hethiter.“ 2. Mose 23, 28.

Was die Hornisse waren, brauchen wir nicht zu erörtern. Sie waren Gottes eigenes Heer, das Er vor seinem Volk hersandte, um die Feinde zu stechen und Israels Sieg leicht zu machen. Unser Gott wird durch die von Ihm selbst gewählten Mittel für sein Volk streiten und den Feinden Schaden zufügen, noch ehe sie in den wirklichen Kampf kommen. Oft setzt Er die Gegner der Wahrheit durch etwas in Verwirrung, wozu die Verteidiger derselben gar nichts beigetragen haben. Die Luft ist voll von geheimnisreichen Einflüssen, die Israels Feinde plagen. Wir lesen in der Offenbarung Johannis, dass „die Erde der Frau half“.

Wir wollen uns niemals fürchten. Die Sterne in ihren Bahnen streiten wider die Feinde unserer Seele. Oft finden wir, wenn wir zum Kampf ausziehen, kein Heer, mit dem zu streiten ist. „Der Herr wird für euch streiten, und ihr werdet stille sein.“ Gottes Hornissen können mehr tun, als unsere Waffen. Wir hätten uns nie träumen lassen, dass der Sieg durch solche Mittel, wie Jehovah sie gebraucht, gewonnen werden würde. Wir müssen unserem Marschbefehl gehorchen und ausziehen zur Eroberung der Völker für Jesus, und wir werden finden, dass der Herr vor uns hergegangen ist und den Weg bereitet hat; so dass wir am Ende fröhlich bekennen werden: „Er siegt mit seiner Rechten und mit seinem heiligen Arm.“