April

எச்சரிக்கைக்குச் செவிகொடுத்தல்

April 3

Sensitive to Warning

Because thine heart was tender, and thou hast humbled thyself before the Lord, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith the Lord. (2 Kings 22:19)

Many despise warning and perish. Happy is he who trembles at the Word of God. Josiah did so, and he was spared the sight of the evil which the Lord determined to send upon Judah because of her great sins. Have you this tenderness? Do you practice this self-humiliation? Then you also shall be spared in the evil day. God sets a mark upon the men that sigh and cry because of the sin of the times. The destroying angel is commanded to keep his sword in its sheath till the elect of God are sheltered: these are best known by their godly fear and their trembling at the Word of the Lord. Are the times threatening? Does infidelity advance with great strides, and do you dread national chastisement upon this polluted nation? Well you may. Yet rest in this promise: “Thou shalt be gathered into thy grave in peace: and thine eyes shall not see all the evil which I will bring upon this place.” Better still, the Lord Himself may come, and then the days of our mourning shall be ended.

ஏப்ரல் 3

எச்சரிக்கைக்குச் செவிகொடுத்தல்

நான் இந்த ஸ்தலத்திற்கும் அதன் குடிகளுக்கும் விரோதமாக அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி உன் வஸ்திரங்களைக் கிழத்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் (2.இராஜா.22:19).

பலர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, அதனால் அழிவடைகிறார்கள். கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடுங்குகிறவன் மகிழ்ச்சி உள்ளவன். யோசியா நடுங்கினான் ஆகையால் கடவுள் யூதாவுக்கு அதன் பெரிய பாவங்களுக்காக வரப்பண்ணின எல்லாப் பொல்லாங்கையும் யோசியா காணாமல் இருக்கச் செய்தார். உங்களுக்கு இந்த விதமான பரிவு இருக்கிறதா? நீங்கள் இவ்விதமாக உங்களைத் தாழ்த்துகிறீர்களா? அப்படியானால் தீங்கு நாளில் காக்கப்படுவீர்கள். அவரவர் காலத்தின் பாவங்களுக்காகப் பெருமூச்சோடு அழுது கலங்குகிறவர்களைக் கடவுள் குறித்து வைத்திருக்கிறார். கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பாதுகாப்படையும்வரை அழிவைக் கொண்டுவரும் தூதன் தன் பட்டயத்தை அதன் உறையிலேயே வைத்திருக்கக் கட்டளையிடப்படுகிறான். அவர்கள் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களாயும் ஆண்டவர் சத்தத்தைக்கேட்டு நடுங்குகிறவர்களாயும் இருக்கிறார்கள். காலங்கள் பொல்லாதவையாய் இருக்கின்றனவா? சடங்காச்சாரங்களும், சிலைவணக்கமும் உண்மையான கடவுள்மேல் பற்றின்மையும் விரைவாக அதிகரித்து வருகின்றனவா? இதன் காரணமாக நிறைந்த நாட்டின்மேல் தண்டனை வரும் என்று அஞ்சுகிறீர்களா? நீங்கள் அஞ்சுவது சரிதான். ஆயினும் நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய். நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்னும் வாக்குறுதியில் அமர்ந்திருங்கள். அதைவிட மேலானது ஆண்டவரே வந்துவிடுவார். நம் துக்க நாட்கள் முடிந்துபோம்.

3. April

„Darum, dass dein Herz erweicht ist über den Worten, die du gehört hast, und hast dich gedemütigt vor dem Herrn, da du hörtest, was ich geredet habe wider diese Stätte und ihre Einwohner, dass sie sollen eine Verwüstung und ein Fluch sein, und hast deine Kleider zerrissen, und hast geweint vor mir; so habe ich es auch erhört, spricht der Herr.“ 2. Kön. 22, 19.

Viele verachten die Warnungen und kommen um. Glücklich ist der, welcher vor dem Wort des Herrn zittert. Josia tat dies, und darum wurde ihm der Anblick des Unglücks erspart, was der Herr über Juda um seiner großen Sünden willen bringen wollte. Habt ihr diese Weichheit? Findet sich bei euch diese Selbstdemütigung? Dann sollt auch ihr am Tage des Unglücks verschont werden. Gott zeichnet mit einem Zeichen diejenigen, welche seufzen und jammern über die Sünden der Zeit. Der Würgengel hat Befehl, sein Schwert in der Scheide zu halten, bis die Auserwählten Gottes geborgen sind; diese werden am besten an ihrer Gottesfurcht und ihrem Zittern vor dem Worte des Herrn erkannt. Sind die Zeiten drohend? Rücken Papsttum und Unglaube mit großen Schritten vor, und fürchtest du Landesstrafen für unsere befleckte Nation? Wohl magst du es. Doch finde Ruhe in dieser Verheißung: „Du sollst mit Frieden in dein Grab versammelt werden und deine Augen sollen nicht sehen alles das Unglück, das ich über diese Stätte bringen will.“ Besser noch, der Herr selbst mag kommen, und dann werden die Tage unseres Trauerns ein Ende haben.