January

பாவங்களை அறிக்கையிடும்போது கடவுள் செயல்ப்படுகிறார்

January 25

He Acts on Honest Confession

He looketh upon men, and if any say, I have sinned, and perverted that which was right, and it profited me not; he will deliver his soul from going into the pit, and his life shall see the light. (Job 33:27-28)

This is a word of truth, gathered from the experience of a man of God, and it is tantamount to a promise. What the Lord has done, and is doing, He will continue to do while the world standeth. The Lord will receive into His bosom all who come to Him with a sincere confession of their sin; in fact, He is always on the lookout to discover any that are in trouble because of their faults.

Can we not endorse the language here used? Have we not sinned, sinned personally so as to say, “I have sinned”? Sinned willfully, having perverted that which is right? Sinned so as to discover that there is no profit in it but an eternal loss? Let us, then, go to God with this honest acknowledgment. He asks no more. We can do no less.

Let us plead His promise in the name of Jesus. He will deliver us from the pit of hell which yawns for us; He will grant us life and light. Why should we despair? Why should we even doubt? The Lord does not mock humble souls. He means what He says. The guilty can be forgiven. Those who deserve execution can receive free pardon. Lord, we confess, and we pray Thee to forgive!

ஜனவரி 25

பாவங்களை அறிக்கையிடும்போது கடவுள் செயல்ப்படுகிறார்

நான்பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன். அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை. என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்! ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் (யோபு 33:27-28).

இவை கடவுளின் அடியாரான ஒருவரின் அனுபவத்திலிருந்து கூறப்பட்ட உண்மை வார்த்தைகளாகும். இவை ஒரு வாக்குறுதிக்கு ஒப்பானவை. ஆண்டவர் செய்துள்ளவைகளையும், செய்து வருபவைகளையும் உலகம் நிலைபெற்றிருக்கும் வரை தொடர்ந்து செய்து வருவார். தம்மிடம் வந்துதங்கள் பாவங்களை நேர்மையாக அறிக்கையிடுபவர்களை அவர் அன்போடு ஏற்றுக்கொள்வார். சொல்லப்போனால் தங்கள் தவறான செய்கையினால் மனக்கலக்கம் அடைந்துள்ளவர்களைக் கண்டுபிடிக்க அவர் விழிப்புள்ளவராகவே இருக்கிறார். ஆகவே மேலே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை நம்வார்த்தைகளாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடும் அல்லவா? நாமும் பாவம் செய்திருக்கிறோமல்லவா? நான் பாவஞ்செய்துள்ளேன் என்று மனதார ஒப்புக்கொள்ளுமாறு நாம் பாவஞ்செய்திருக்கிறோம் அல்லவா? உண்மை வழியிலிருந்து மாறிச்சென்று வேண்டுமென்றே பாவஞ் செய்திருக்கிறோம்அல்லவா? பாவம் செய்வதால் நித்திய இழப்பு ஏற்படுமேயல்லாமல் இலாபம் ஒன்றும் ஏற்படுவதில்லை என்று உணர்ந்தும் பாவம் செய்திருக்கிறோம் அல்லவா? இதையெல்லாம் உண்மையாக ஒப்புக்கொண்டு கடவுளிடம் செல்வோமாக! இதற்கு அதிகமாக ஒன்றையும் அவர் நம்மிடமிருந்துஎதிர்பார்க்கவில்லை. இதற்குக் குறைவாக ஒன்றையும் நாம் செய்யவும் முடியாது.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கெஞ்சுவோமாக. பாவத்திற்குத் தண்டனையாக நாம் விழுந்து, துன்பப்படவேண்டிய நரகக் குழியிலிருந்து அவர் நம்மைத்தப்புவிப்பார். அவர் நமக்கு வெளிச்சமும் உயிரும் அருளுவார். அப்படியிருக்க நாம் ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? ஏன் சந்தேகப்பட வேண்டும்? பணிவான ஆத்துமாக்களை ஆண்டவர் ஏளனம் செய்வதில்லை. அவர் வாக்களித்தபடியே செய்வார். குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம். மரணதண்டனை அடைய வேண்டியவர்கள் மன்னிப்புப் பெறலாம். ஆண்டவரே, நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

25. Januar

„Er sieht auf die Menschen, und so einer spricht: Ich habe gesündigt und das Recht verkehrt, und es hat mir nichts genutzt; so wird Er seine Seele erlösen, dass sie nicht ins Verderben fährt, und sein Leben wird das Licht sehen.“ Hiob 33, 27. 28.

Dies ist ein Wort der Wahrheit, aus der Erfahrung eines Mannes Gottes, und es kommt einer Verheißung gleich. Was der Herr getan hat und tut, das wird Er fortfahren zu tun, so lange die Welt steht. Der Herr will alle aufnehmen, die mit einem aufrichtigen Bekenntnis ihrer Sünde zu Ihm kommen; in der Tat, Er sieht immer nach solchen aus, die um ihrer Fehler willen in Not sind.

Können wir uns nicht die hier gebrauchten Worte zu eigen machen? Haben wir nicht gesündigt, persönlich gesündigt, so dass wir sagen müssen: „Ich habe gesündigt?“ Vorsätzlich gesündigt und das Recht verkehrt? Gesündigt so, dass wir die Entdeckung gemacht haben, es ist kein Gewinn dabei, sondern ewiger Verlust? Lasst uns denn zu Gott mit diesem ehrlichen Geständnis gehen. Er verlangt nicht mehr. Wir können nicht weniger tun.

Lasst uns seine Verheißung in dem Namen Jesu geltend machen. Er will uns von dem Abgrund der Hölle erlösen, der sich vor uns auftut; Er will uns Leben und Licht gewähren. Warum sollten wir verzweifeln? Warum auch nur zweifeln? Der Herr spottet nicht demütiger Seelen. Er meint, was Er sagt. Den Schuldigen kann vergeben werden. Die, welche Hinrichtung verdienen, können Begnadigung erlangen. Herr, wir bekennen und wir bitten Dich, zu vergeben!