தேவன் மகிழும் தியாக பலிகள் !

நாம் எல்லோருமே கனி கொடுக்க விரும்புகிறோம்! ஆனால்! அந்தோ, அநேகர் அதை மனுஷர் முன்பாகத் தந்திடவே விரும்புகின்றனர்! தியாகங்கள் செய்திடவும் விரும்புகிறோம். அதையும் மற்றவர்கள் காண்பதற்கு ஏதுவான முறையில் செய்கிறோம்!

நாம் எவ்வித தியாகசேவை செய்ய வேண்டும் என்பதையும், அதை நிகழ்த்தும் இடத்தையும், காலத்தையும் தேவனே தெரிந்து மேன்மைக்கு எந்தத் தீனியும் கிடைக்காது! அவர் நம்மை மூடி மறைத்து, நம் அன்பையும் நம் உண்மையையும் அவர் ஒருவருக்கே வெளிப்படுத்தும் பொருட்டு, நாம் தனித்து நிற்கு வேண்டிய இடத்திற்கு நடத்திவிடுவார். நாம் சுயத்திற்கு மரிப்பதை, எவ்விதமா மரிக்கவேண்டும் என நாமாகவே தீர்மானிக்கத் தேவன் அனுமதி தருவதே இல்லை! ஒருக்காலும் இல்லை!! எவ்விதமான மரணத்தினால் நாம் தேவனை மகிமைப்படுத்த முடியும் என்பதை அவரே காட்டுவார் (யோவான் 21:19). ஓர் அடிமையாக இருக்கும் நான், இப்போது நான் என் அரையைக் கட்டிக்கொண்டு, தேவனை சேவித்து அவரை மகிமைப்படுத்தும்படி நான் விரும்புகிற இடத்துக்குச் செல்வேன் எனக்கூற அனுமதியே இல்லை. நிச்சயமாக இல்லை. அதற்கு மாறாக, அடிமையான நான் என் கைகளை நீட்டுவேன். வேறொருவன் என் அரையைக் கட்டி, எனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு என்னைக் கொண்டு போவான் (யோவான் 21:18). இயேசு தன் சகோதரர்களிடம் கூறியதைக் கேட்டீர்களா? என் வேளை இன்னும் வரவில்லை! உங்கள் வேளையோ, எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது! என்றார் (யோவான் 7:6). ஆம்! அவர்களோ தங்களுக்காகவே ஜீவித்தார்கள். ஆனால் இயேசுவோ நமக்காகவே வந்த தேவனின் அடிமை. சிலுவையில் மரணபரியந்தமும், அவர் மரணத்திற்கு கீழ்ப்படிந்தார். இங்கு நாம் காணும் மரணம் யாது? மகாக்கேடான துயர்மிகுந்த மரணம்! இதே வழியில் நாமும் சென்று பிதாவை மகிமைப்படுத்துவதற்கு ஆயத்தமா? இன்று அனேகர் நாங்கள் செய்த தியாகங்களைச் ஜம்பமாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால்! அவைகளில் ஒன்று கூட தேவனைப் பிரியப்படுத்த முடியவில்லையே! ஏன் தெரியுமா? தங்கள் தியாகங்கள் இன்னது எனவும், அதன் நேரத்தையும், இடத்தையும், அவரவர்கள் தாங்களாகவேத் தேர்ந்து தெரிந்து கொண்டதன் பரிதாபமேயாகும்!

பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இயேசுவுக்காய்த் தன்னைத் தியாகபலியாய் ஒப்புக்கொடுத்த உத்தம ஆசாரியன்! அவர் தேவனின் சுவிசேஷத்தை இந்த ராஜரீக ஆசாரித்துவ முறையிலேயே பிரகடனம் செய்தார். ஆம்! புறஜாதிகள் தூய பரிசுத்தாவியால் பரிசுத்தமாக்கப்பட (ளுயnஉவகைநைன) வேண்டும் என்பதே அவரது ஆசாரித்துவ தியாக பணியாக இருந்தது. இவ்வித தியாகபலிலே தேவனை மகிழச்செய்கிறது!
வெளிப்படையாக கிரியையைக் காட்டிலும், மறைந்து வாழ்வதற்கே ஒரு தேவனுடைய பிள்ளைக்கு அதிக கிருபை தேவைப்படுகிறது.

இம் மேன்மையை, ஏசாயா தன் தரிசனத்தில் கண்ட சேராபீகள் அருமையாகச் சித்தரிக்கிறார்கள் (ஏசா6:2). இப்பரலோக வாசிகளுக்கு ஆறு செட்டைகள் இருந்தன. ஆகிலும் தாங்கள் பறப்பதற்கு இவைகளில் இரண்டு செட்டைகளையே உபயோகித்தனர். அடுத்த நான்கு செட்டைகளையோத் தங்களை மூடி மறைத்துக் கொள்ள வைத்துக்கொண்டனர். பார்த்தீர்களா! தாங்கள் வெளிப்படையான கிரியை செய்வதற்குத் தேவையாய் இருந்த செட்டைகளைக் காட்டீலும் இருமடங்கு செட்டைகள் அவர்களை மறைத்துக்கொள்வதற்குத் தேவைப்படது! பரலோகவாசிகளுக்கே இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் என்றால், பெருமையின் விஷம் ஏறிய நமக்கு எவ்வளவு அதிகம் தேவை! மகா உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்துவிடும்படி நாம் பலமுறை நம் எல்லா செட்டைகளாலும் அடித்துப் பறந்து மிதக்கிறோம். ஆனால், அய்யகோ! ராஜா இந்த நம் அழகில் பிரியப்படவில்லையே! ஆம் மறைந்து ஜீவிப்பது பரலோகத்திற்குரிய ஒரு சட்டமாகும். நாம் வேதத்தில் காணும் கேருபீன்களும் தங்கள் கிரியைகளை செட்டைகளுக்குள் மறைத்தே வைத்திருந்தனர் (எசே 10:8).

இதுவே தேவனுடைய சபைக்கும் பொருந்துமல்லாவா? உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்றும் ஜெபிக்கியோமே! நம்மை நாமே மூடி மறைத்துக் கொள்வதற்கு தேவன் நமக்கு ஏதாகிலும் வாஞ்சை கொண்டால் போதும்…… நம்மை மறைத்துக் கொள்வதற்கு ஏராளமாக சந்தர்ப்பத்தை நிச்சயமாய் அருளுவார். ஆனால்! நாமோ நம்மை ஒரு பொருட்டாக வைத்துக்கொள்ளவே இச்சிக்கிறோம். பிரகாசிக்கும் நம் முகத்தை, சாடி ஓடும் நம் சுறுசுறுப்பான பாதங்களையும் மூடி மறைப்பதற்குரிய விரும்பத்திற்குப் பதிலாக மற்றவர்களும் அதைக் காணவேண்டும் என்றே பேராவல் கொள்கிறோம். ஆ….. இது பேரிழப்பன்றோ!

இவ்விதமாய் உங்களை மறைத்துக்கொள்ளும்போது, உங்கள் ஜீவியத்தின் விலை குறைந்து விடுமே என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். பொறுங்கள்! தங்களை மூடி மறைத்துக்கnhண்ட சேராபீன்கள் தேவனைத் துதித்த போது நடந்த நிகழ்ச்சியை இப்போது உற்று நோக்குங்கள்!! (ஏசா 6:3). ஆலயமே கிடுகிடுத்து நடுங்கியது! தீர்க்கதரிசியும் அலறிப் புடைத்து, ஐயோ! அதமானே;, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் (வச5) என்றான்! ஆம், இப்பரலோக வாசிகளின் துதியானது, வேறெதுக்கெல்லாமோ ஐயோ சொன்ன தீர்க்கதரிசியைத் தாழ்மைப்படுத்தி இப்போது தனக்கு ஐயோ எனக்கதறும்படி செய்து விட்டதே! கண்டீர்களா விந்தையை! இந்த மறைந்திருக்கும் நிலையில் மாத்திரமே நீங்கள் அதிகக் கனியையும் வலிமையான சேவையையும் நல்கிட முடியும்!!

சிலுவை இல்லாத இயேசுவா என்ற நூலிலிருந்து…