ஆதியாகமத்தில் பத்து முக்கியமான ஆரம்பங்கள்

(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25)

(2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26,  2:1-25)

(3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7)

(4) பலியின் ஆரம்பம் (ஆதி.4:1-4)

(5) குடும்ப ஜீவியத்தின் ஆரம்பம் (ஆதி.4:1-15)

(6) நாகரீகத்தின் ஆரம்பம் (ஆதி.4:16-29)

(7) மரணத்தின் ஆரம்பம் (ஆதி.4:8,  5:1-32)

(8) பற்பல ஜாதிகளின் ஆரம்பம் (ஆதி.10)

(9) பற்பல பாஷைகளின் ஆரம்பம் (ஆதி.11)

(10) தெரிந்தெடுக்கப்பட்ட எபிரெய ஜாதியின் ஆரம்பம் (ஆதி.12 – 50 அதிகாரங்கள்)

கிருபைக்கு உண்மையாயிருத்தல்

யூதா 1:1-16

கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும் அதிகமாக அநுபவிக்க முடியுமா? அப்போஸ்தலன் இதே கேள்விகளை ரோமர் 6:1,2ல் கேட்டு பதிலளிக்கிறார்.  சில கள்ளப் போதகர் சபைக்குள் அன்பின் விருந்து சமங்களில் நுழைந்திருக்கிறார்களே.  அவர்கள் கடவுளின் கிருபை நமக்கிருப்பதால் காமவிகாரத்தில் ஈடுபடலாமென்று போதித்து சபையின் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கறைபடுத்தி விட்டார்கள்.  அப்படிப்பட்டவர்களுடைய நடத்தைக்கு என்ன பலன் கிடைக்குமென்பதை யூதா கடினமான வார்த்தைகள் மூலம் சபையாருக்கு எடுத்துக் காட்டுகிறார்.  இவர்கள் ஆக்கினைக்குள்ளான நித்திய தண்டனையை அநுபவிக்கிறதினாலே மற்றவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிற முகாந்திரமாயிருக்கிறார்கள்.  நாம் சத்திய வேதத்தில் கிறிஸ்துவை பின் பற்றுபவர்களைப் பற்றியும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களைப் பற்றியும் வாசிக்கிறோம்.  அவர்களின் ஜீவியத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோமா?

ஆயிரம் வருஷ ஆட்சி

உணவு :
ஆதி 1:29 பாவத்தின் பின் பயிர்கள் ஆகாரம்
ஆதி 3:18 ஜலப்பிரளயத்தின்பின் மாமிச ஆகாரம்
ஏசா 65:25, 11:8-9 மிருகங்கள் தீங்கு செய்வதில்லை

சரீரமும் ஆயுசும் :
ஏசா 35:5-6, 29:18-19 ஆரோக்கியமான காலம்
ஏசா 56:3-7 அண்ணகன் பட்டமரம்…. சொல்லான்
யாத் 23:26 கர்ப்பம் விழுகிறதும் மலடும் இருப்பதில்லை
சங் 113:9 மலடி சந்தோஷமாய் பிள்ளை…
ஏசா 65:20-21, சக 8:4-5 விருட்சத்தின் நாட்கள் போல் ஜனத்தின் நாட்கள்.
ஏசா 11 :6-9

இஸ்ரவேலின் நிலை :
ஏசா 27:11-13 மீதியானவர்களை மீட்டுக்கொள்வார்
ஏசா 11:11-16 ஆபிரகாமுக்கு தேவன் அளித்தவாக்கு நிறை…
எசே 47:14,ஆதி 15:18-21 எகிப்து நதி-ஐபிராத்து நதி மட்டும்.

தாவீதின் சிங்காசனம் :
லூக் 1:32 இயேசுவுக்கு கொடுத்தல்.
ஏசா 32:1, வெளி 20:4 நீதியாக அரசாளுவார்

யுத்தங்கள் ஒழியும் :
சங் 46:9, ஏசா 2:4 பிர 4:15யுத்தங்ள் இல்லை

ஆலயமும் கட்டப்படல் :
வெளி 11:1-3 ஆலயம் இருந்தது
வெளி 12:1-7,தானி 9:27 வனாந்தரத்திற்கு ஓடுதல்
தானி 8:11 பலிகள் நீக்கப்படல்

இயற்கை :
வெளி 5:13 சகல சிருஷ்டிகளும் அவரைச் வணங்கின

ஆகாயம் :
ஏசா 4:5, (வெளி6:14) மேகம், அக்கினி.. காவல் உண்டாயிருக்கும்
ஏசா 30:26 சூரிய சந்திரனின் பிரகாசம்

முள், பூமியின் பலன் :
ஆதி 3:18 சாபத்தின் பலன் முள்
ஏசா 55:13 தேவதாரு விருஷ்சம், மிருது செடி

நீர்:
எசே 47அதி., 8-12 விருட்சங்கள் உண்டாகும்.
சக 14:,48 ஏற்றகாலத்தில் மழை பெய்யும்
உபா 28:12 மழை ஆசீர்வாதமாய் இருக்கும்.

செழிப்பான தோட்டம் :
ஏசா 35:1-2, 15 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழும்
சங்67 5-6, 72:16, யோவே 3:18

ஆவியின் கனிகள்

அன்பு
நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள்.

சந்தோஷம்
நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள்.

சமாதானம்
நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்.

நீடியபொறுமை
நீங்கள் நீடிய பொறுமை உள்ளவர்களாயிருந்தால் போராட மாட்டீர்கள்.

தயவு
உங்களிடத்தில் தயவு நிறைந்திருந்தால் மென்மையான பதில் அளிப்பீர்கள்.

நற்குணம்
உங்களிடத்தில்  நற்குணம் இருந்தால் எரிந்துவிழ மாட்டீர்கள்.

விசுவாசம்
கர்த்தர் மேல் உங்கள் விசுவாசம் திடமாயிருந்தால் சுயபலத்தை நம்பமாட்டீர்கள்.

சாந்தம்
உங்களிடத்தில் சாந்தம் குடிகொண்டிருந்தால் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பதில் பேசமாட்டீர்கள்.

இச்சையடக்கம்
நீங்கள் இச்சையடக்கம் உள்ளவர்களாயிருந்தால் உங்களையே அடக்கி ஆளுவீர்கள்.

கடவுளின் கரிசனை

மத்தேயு 15:21-39

தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல.  குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது.  எனவே, இஸ்ரவேலரிடம் மட்டுமே சென்றார்.  இஸ்ரவேலரையும் தாண்டி பிறரிடம் நற்செய்தி அறிவிக்கும் காலம் இன்னும் வரவில்லை.  மேலும், இயேசு அக் கானானியப் பெண்ணின விசுவாசத்தை சோதிக்க விரும்பினார்.  வ. 26 – வ.  24-ல் இயேசு தாம் கூறியதை வலியுறுத்துகிறார்.  நாய் – பிற இனத்தவரைக் குறித்த யூதர் பயன்படுத்திய இழி சொல். வ. 27 – இதையும் ஏற்றுக்கொண்டு, கடவுளின் கருணைக்கு நான் உரிமைபாராட்டும் தகுதி எனக்கில்லை என்றாலும், சிந்தியதை எறிவதுபோல், எனக்கு உதவ வேண்டும் என்று கேட்கிறாள், அப்பெண்.  நான் தாழ்மையுடன கடவுளிடம் வருகிறேனா? அயரா அன்பு: வ.  30,31 – இயேசுவின் கரிசனைக் கட்டுப்பட்டதல்ல.  பிற இனத்தவரிடையே இக்குணமாக்குதல் நடைபெற்றிருக்க வேண்டும்.  ஏனெனில், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினர். குறையா நிறைவு: ஒரே நிகழ்ச்சி இருமுறை கூறபட்டுள்ளது என்று எண்ணத் தேவையில்லை.  இருமுறை கூறி இடத்தை வீணாக்கமாட்டார்.  சிறுகுறிப்புகளில் வேறுபாடுகள் உண்டு.  இயேசுவே பின்னர் இருமுறையும் எஞ்சியதைக் குறிப்பிடுகிறார்.  கடவுளின் அளவிலாக் கொடைக்கு வரையறை கட்ட வேண்டியதில்லை நாம்.