Parable of the Good Samaritan

நல்ல சமாரியன் – (லூக்.10:25-37)

25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய். அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். ஆப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்

ஆபிரகாமின் மரணம்

abraham-stars

ஆபிரகாம் தன் 175 ஆவது வயதில் பெயர்செபாவில் மரித்தான். அவன் குமாரனாகிய ஈசாக்கு இஸ்மவேலும் அவனை எபிரோனுக்கு எடுத்துச் சென்று மக்பேலா என்னும் குகையில் அடக்கம் செய்தார்கள். (ஆதி.25:7-10).

ஆபிரகாமின் மற்று மக்கள்

keturah

சாராளின் மரணத்திற்குப் பின் (கி.மு. 1826ல்) ஆபிரகாம் கேத்தூராளை மணந்தான். கேத்துராள் ஆபிரகாமுக்கு 6 பிள்ளைகளைப் பெற்றாள். ஆபிரகாம் தனக்கு உண்டானதெல்லாம் ஈசாக்குக்குக் கொடுத்தான். தன் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கு நன்கொடைகளைக் கொடுத்துக் கீழ்த் தேசங்களுக்கு அனுப்பிவிட்டான் (ஆதி.25:1-6).

ஈசாக்கின் விவாகம்

Genesis-Chapter-24

ஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளின்படியெல்லாம் செய்தாள். அவள் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபேக்காளின் சகோதரன் லாபானும், அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தார்கள். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபான் இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது என்று சொல்லி, ரெபேக்காளை அவனுடன் அனுப்பிவிட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள். (ஆதி.24:1-67, 25:20)

ஆபிரகாம் மோரியா மலைக்கு (கி.மு.1834)

தேவன் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று, பலி செலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்ப்படிந்து பலி செலுத்தச் சென்றான். ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்டு, பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே. நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். (ஆதி.22.1-12).

சோதோம் கோமோராவின் அழிவு

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப் போனார்கள். அந்தத் தூதர்கள் லோத்தையும் அவன் மனைவியையும், இரு குமாரத்திகளையும் பட்டணத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய் விட்ட பின்பு, சோதோம் கொமோரா பட்டணத்தை அழித்தார்கள். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். (ஆதி.18:22-33,  19:1-29).

ஈசாக்கின் பிறப்பு – முன்னறிவிப்பு

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்தார். ஆபிரகாம் 3 புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் கர்ப்பவதியாகி ஒரு குழந்தையைப் பெறுவாள் என்றார். சாராள் நகைத்தாள். (ஆதி.18:1-12).

ஆபிராமுக்கு இஸ்மவேல் என்ற மகன்

காலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலைப் பெற்றாள். (கி.மு. 1868) தேவன் அவனுக்குத் தரிசனமாகி, திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஜாதிகளுக்கெல்லாம் தாயாக இருப்பாள் என்று சாராயின் பெயரைச் சாராள் என்று மாற்றினார். கர்த்தர் இஸ்மவேலைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். இஸ்மவேலின் 13வது வயதில் ஆபிரகாமும் அவனுடையவர்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு வேறுபடுத்தப்பட்டார்கள். (ஆதி.16:1-16, 17:1-27).

லோத்தை மீட்டுக் கொண்டான்

லோத்தையும் அவனனைச் சேர்ந்தவர்களையும் கெதர்லாகோமேரும் மற்றும் ராஜாக்களும் கி.மு. 1884ல் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள். இதை அறிந்த ஆபிராம் தன்னோடிருந்த 318 ஆட்களோடு சென்று அவர்களை மீட்டுக்கொண்டு வந்தான். திரும்பிவரும்போது சாலேமின் ராஜாவான மெல்கிசேதேக் அவனை ஆசீர்வதித்தான். (ஆதி.14:5-24)

ஆபிராமும் லோத்தும் பிரிதல் (கி.மு. 1891)

ஆடுமாடுகளும், வேலையாட்களும் மிகுதியாய் இருந்தபடியால் ஆபிராமும் லோத்தும் பிரிந்தாhகள். லோத்து சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான். ஆபிராம் கானானில் குடியிருந்தான். பின்பு எபிரோனில் வந்து மம்ரேயின் சமபூமியில் தங்கினான். (ஆதி.13:5-18).

ஆபிராம் திரும்பப் பெத்தேலுக்கு

ஆபிராம் மிருஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும் உடையவனாய்த் திரும்பி வந்தான். அவர்கள் வரும்போது ஆகார் என்னும் அடிமைப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள் (ஆதி.13:1-4)

பஞ்சத்தினால் எகிப்துக்கு

கி.மு. 1891ல் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் எகிப்துக்குச் சென்றான். சாராய் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். தன்னைக் காத்துக்கொள்ளும்படி ஆபிராம் சாராயைத் தன் சகோதரி என்று பார்வோனிடம் சொன்னாள். பார்வோன் சாராயை அழைத்து அரண்டனையில் வைத்துக்கொண்டான். கர்த்தர் பார்வேனை வாதித்தார். உண்மை அறிந்தபோது சாராயை அனுப்பினான். (ஆதி.12:10-20).

ஆரானிலிருந்து கானானுக்கு

கி.மு. 1892ல் தேராகு ஆரானில் மரித்தான். தேராகு மரித்த பின் ஆபிராம் சாராயையும், லோத்தையும் கூட்டிக்கொண்டு  கானானுக்குப் புறப்பட்டான். கானானில் சீகேம் என்னும் இடத்தில் வந்து மோரே என்னும் சமபூமியில் தங்கினான். ஆபிராம் பெத்தேலில் ஒரு பலீபீடத்தைக் கட்டித் தேவனைத் தொழுதுகொண்டான் (ஆதி.12:4-9).

ஆபிரகாமின் அழைப்பு

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, “நீ உன் தேசத்தையும், இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கிற தேசத்திற்குப் போ…. என்றார். (கி.மு. 1907). ஆபிராமும், தகப்பனாகிய தேராகும், மனைவியாகிய சாராயும், ஆரோனின் குமாரனாகிய லோத்தும் ஊர் என்னும் தங்கள் தேசத்தைவிட்டு ஆரானுக்குச் சென்று அங்கே தங்கினார்கள். (ஆதி.12:1-3, 11:31-32). இது முதல் வாக்குத்தத்தத்தின் காலம் ஆரம்பமாயிற்று.

ஆபிரகாம் (கி.மு. 1967-1792)

ஆபிரகாம்  கி.மு. 1967ல்  ஊர் என்னும் தேசத்தில் தேராகுவின் மகனாகப் பிறந்தான். நோவாவிலிருந்து ஆபிரகாம் 10 வது தலைமுறை. ஆபிரகாம் அவன் நாட்களில் விக்கிரக வணக்கத்தை விரும்பாதவனாகக் காணப்பட்டான். கர்த்தர் அவனைத் தமது திட்டங்களில் பயன்படுத்தச் சித்தமானார். ஆபிரகாம் சாராளை மணந்தான். (கி.மு.1927)

ஆபிரகாமைத் தெரிந்து கொள்ளுதல்

நோவாவின் சந்ததி உலகத்தின் எல்லா தேசங்களிலும் பெருகினார்கள். இந்நிலையில் தேவன் தமக்கென்று ஒரு ஜனத்தை ஆயத்தம்பண்ணச் சித்தமானார். அதற்காகத் தேவன் ஆபிரகாம் என்ற ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார். ஆபிரகாமிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தை எழுப்பினார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்பவர்கள் கோத்திரப் பிதாக்களாகக் கருதப்படுகிறார்கள்.

பாபிலோனில் விக்கிரக வணக்கம் ஆரம்பம்

நிம்ரோத்

நோவாவின் சந்ததியில் நிம்ரோத் என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். அவன் பாபிலோனை ஸ்தாபித்தான். அவன் தன்னைச் சூரியக் கடவள் என்று சொல்லி, விக்கிரக வணக்கத்தையும் ஸ்தாபித்தான். அது பாபிலோனிய ரகசியம் என்று அழைக்கப்பட்டது. இது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான் பாபிலோனியாவில் ஜனங்களை மறுபடியும் வஞ்சிக்கும் செயலாகும். பாபிலோனில் ஆரம்பிக்கப்பட்ட விக்கிரக வணக்கம் உலகத் தேசங்களில் எங்கும் பரவிற்று.

ஆனாலும் கர்த்தர் பாபிலோனிலிருந்து தமக்கென்று ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டார்.